2009 ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய வலைப்பூப் பயணம் இத்தோடு நூறு பதிவுகள் ஆகிறது. என்னைப் பொருத்தவரை எண்ணிக்கை எப்போதும் முக்கியமே இல்லை. நூறு பதிவுகள் எழுதிவிட்டேன் என்று கூவிக்கூவிச் சொல்லும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் எழுதிக் கிழித்துவிடவில்லை. சக பதிவர் நண்பர்களின் வேகத்திற்குப் பக்கத்தில் கூட என்னால் போகமுடியாது. ஆனாலும் ரொம்பவும் மோசமாகவோ, மொக்கையாகவோ எதையும் எழுதிடவில்லை எனும் மனத்திருப்தி உண்டு. இப்போது இந்த இடத்தில் கொஞ்சம் நின்று பார்த்து தவறுகள் ஏதும் இருப்பின் திருத்திக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. அதேபோல என்னோடு பயணிக்கும், என்னை வழிநடத்தும், எப்போதும் என் நலனில் அக்கறை கொண்டிருக்கும் அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்வதற்காகவும் இந்தப் பதிவு இருக்கட்டும்.
சவுதி வந்த புதிதில் கண்ணைக்கட்டிக் காட்டில் விடப்பட்டதைப் போன்று திக்குத் தெரியாமல் திணறிக்கொண்டிருந்த நேரத்தில் பதிவுலகமே ஒரே ஆறுதல் ஓரு இரண்டு வருடங்களுக்கு வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்தேன். அப்கேக் வேலை இப்போது இருப்பதைப்போல அத்தனை கடினமானதல்ல. வேலை நேரம் போக இணையத்தில் உலவுவதற்கும் நிறைய நேரம் கிடைத்தது. ஓய்வு நேரம் மொத்தத்தையும் புத்தக வாசிப்பிற்கென்றே ஒதுக்கினேன். வாசித்த நூல்களையெல்லாம் நண்பர்களோடு இணையத்தில் பகிர்ந்துகொள்ளலாமே என்ற ஆவலில் ஒரு வலைப்பூ தொடங்கி எழுதத் துவங்கினேன்.
இணைய அறிமுகம் இல்லாத ஒரு காலம் இருந்தது. தோன்றியதையெல்லாம் கிறுக்கிக்கொண்டிருந்த காலம். பத்திரிக்கைகளுக்கு அனுப்பி போன வேகத்தில் பாய்ந்து திரும்பி வந்தன சில கதைகள். எழுதி எழுதிப் பார்ப்பதும் கொஞ்சம் சுமாரானவற்றை சேமித்துவைப்பதுமாக இருந்தேன். பின்னர் சில இலக்கிய நண்பர்களின் அறிமுகம், கூட்டங்கள், பரந்துபட்ட வாசிப்பு என்று என்னை நானே விரும்பி விரும்பி முன்னகர்த்திக்கொண்டேன். இப்போது இந்த நான்காண்டு இணைய பரிச்சயம் நான் நினைத்துப்பார்க்காத பல அற்புதங்களை எனக்குக் கொடுத்துள்ளது. ஒரு சின்ன க்ளிக்கில் தேவையானவற்றை அள்ளிவரலாம் எனும் ஆச்சர்யமான வசதி. நினைத்ததை எழுதவும், உரையாடவுமான ஒரு அற்புதமான வெளி இந்த இணையம். இங்கு என் பங்காக நானும் ஒரு வலைப்பூ வைத்திருக்கிறேன். ஏதோ என் வாசிப்பனுவத்தையும் வாழ்வனுபத்தையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது நண்பர்களே.
இங்கு என்ன வேண்டுமானாலும் எழுதலாம் எனும் கட்டற்ற சுதந்திரம் மகிழ்ச்சியும் பயமும் கலந்த ஒரு கலவையான உணர்ச்சியைக் கொடுக்கிறது. ஏனைய வலைப்பூ நண்பர்களைப்போல நான் நிறைய எழுதுபனல்ல. என் பயணம் மெதுவாகவே இருக்கிறது. இருப்பினும் என்னைத் தொடர்ந்து வாசித்து உற்சாகப்படுத்தி வரும் பேரன்பிற்குரிய என் வலைப்பூ நண்பர்களுக்கும் என் உயிருக்கு உயிரான நண்பர்களுக்கும் என் நெகிழ்வான நன்றிகள்.
எல்லாவற்றிற்கும் மேலாய் எத்தனை எத்தனை சொந்தங்களை இந்த இணையம் கொடுத்திருக்கிறது. அன்போடு கை பிடித்து வழிநடத்திச் செல்லும் அண்ணன்கள், எத்தனையோ மைல்களுக்கு அப்பாலிருந்து மணிக்கணக்காக தொலைபேசும் மதிப்பிற்குரிய அன்பர்கள், கூடவே இருந்து பார்த்துக்கொள்ளும் சவுதி நட்புகள், மின்னஞ்சலில் தொடர்புகொள்வதும் கூகுள் டாக் உரையாடலுமாக இணையத்தில் இருக்கும் நேரமெல்லாம் உடனிருக்கும் நண்பர்கள், கஷ்ட காலத்தில் விழுந்துவிடாமல் கைகொடுத்த நண்பர்கள் என்று என் நன்றிப் பட்டியல் கொஞ்சம் பெரிது. அனைவருக்கும் என் அன்பும் வணக்கங்களும். இதுவரையிலான இந்தப் பயணத்தில் நண்பர்கள் யாரையேனும் கடுஞ்சொற்களால் பேசியிருந்தாலோ, மனம் புண்படும்படி நடந்திருந்தாலோ, ஏதேனும் ஒரு வகையில் என் எழுத்து உங்களைக் காயப்படுத்தியிருந்தாலோ, தயைகூர்ந்து மன்னித்துவிடுங்கள் நண்பர்களே.
நூறு பதிவுகள் என்பது எண்ணிக்கை தானே தவிர இப்போதுதான் புதிதாக தொடங்கியிருப்பதாக நினைத்துக்கொள்கிறேன். எழுதுவதற்கு நிறைய இருக்கிறது. பதிவிடாவிட்டாலும் எழுதிக்கொண்டேதான் இருக்கிறேன். புதிதாக ஒரு முயற்சி. ஒரு தலைமுறையின் வரலாற்றை, என் கந்தக மண்ணின் மக்களை எழுத்தில் முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். ஓரளவிற்குத் திருப்தி ஏற்படும் போது அதையும் பதிவிடுவேன். அதேபோல புத்தக வாசிப்பனுபவத்தை எழுதுவதற்கென்றே பிரத்தியேகமாக தொடங்கப்பட்ட வலைப்பூ, பகிர்வுகள், சொந்தக்கதைகள், சினிமா என்று மெல்ல மெல்ல தடம் மாறிச் சென்றுவிட்டது. இனி வாசிப்பனுவங்கள் வரிசையாக வரும். நன்றி நண்பர்களே.
ஜூன் 6
எதிர்பார்த்ததைப்வ்போலவே காலையில் வீட்டிலிருந்து போன் வந்தது. என் செல்லத்தின் மழலைப்பேச்சில், அப்பா அம்மாவின் அன்பான வார்த்தைகளில், மனைவியின் ப்ரியம் ததும்பும் பேச்சில், தம்பியின் அன்பில், ஒரு வாரம் முன்பாகவே வாழ்த்திய என் அன்பு நண்பர் அழகேஷின் தூய நட்பில், எப்போதும் இந்த நாளை மறக்காத என் ப்ரிய ராஸ்கல்களின் உற்சாகமான வாழ்த்தில் இந்த நாளின் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. இதற்காகவேனும் வருடத்திற்கொரு முறை இந்த நாளை எதிர்பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது. என்னைத் தாங்கும் என் குடும்பத்திற்கும், கருவேப்பிலைக் கொத்தைப்போல எனக்கே எனக்கென இருக்கும் என் குட்டி நண்பர் கூட்டத்திற்கும் நன்றியா சொல்ல முடியும். கொஞ்சம் கண்ணீர்.. நிறைய அன்பு மக்களே..

46 கருத்துரைகள்:
வாழ்த்துக்கள் பாஸ் :)
மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் தோழர்.,
வாழ்த்துக்கள் பாஸ் :)
வாழ்த்துக்கள் பாஸ். நீங்கள் படிக்கும் ஸ்பீடுக்கு எழுதுறது ஸ்லோவா இருந்தாலும். நின்னு விளையாடுறீங்க..
அருமை நண்பா
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
எப்போதுமே நீங்கள் மிகவும் இல்க்கியத்தரத்துடனும் கைதேர்ந்த சொல்லாடல்களுடனும் எழுதுபவர்,அந்த வித்தை எல்லோருக்குமே கைவராது,நிறைய வியந்திருக்கிறேன்.உங்களுக்கு இரட்டை வாழ்த்து சொல்லுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்,உலக சினிமா விமர்சனங்கள் தொடர்ந்து எழுதவும்.கிராமிய மனம் தவழும் கதைகள் தொடர்ந்து படைக்கவும்.தங்கர் பச்சான் போன்ற சிறந்த படைப்பாளி உங்களுக்குள்ளும் உண்டு என அறிவேன்.
100 க்கு வாழ்த்துகள் சரவணா.
படித்துவிட்டு வருகிறேன்.
ரோடு ரோலர் கூட
மிக மெதுவாகத்தான்
நகர்கிறது
பின்னாளில்
அதன் சாலையில்
வாகனங்கள்
வேகமாக நீந்தி
செல்லும் பொருட்டு.
பிறந்த நாள் வாழ்த்துகள்.
//ரோடு ரோலர் கூட
மிக மெதுவாகத்தான்
நகர்கிறது
பின்னாளில்
அதன் சாலையில்
வாகனங்கள்
வேகமாக நீந்தி
செல்லும் பொருட்டு.//
அதுக்காக வருஷம் பூரா ரோடு போட்டுட்டு இருக்காம வாரத்துக்கு ஒரு பதிவாவது எழுதுங்க :)
சீக்கிரமே ஒரு புத்தகம் வெளியிட வாழ்த்துகள்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
அன்புத் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நான் விரும்பி வாசிக்கும் வலைப்பக்கங்களில் தங்களுடையதுன் ஒன்று. சிலவிடுபட்டுப் போயிருக்கலாம். தங்கள் எழுத்தும், நடையும் இயல்பானதாய் வாசிக்கிறவனை நெருங்குகின்றன.
வாழ்த்துக்கள் தம்பி. தொடருங்கள்.
நண்பரே உங்கள் தமிழ் தனித்துவமானது.
மிகவும் புனிதமானது.நல்லவை எப்போதும் கொஞ்சமாகவும்...அபூர்வமாகவும் இருக்கும்.எண்ணிக்கை முக்கியமேயில்லை.எண்ணிக்கையை வைத்தா ஜெயகாந்தனை கொண்டாடுகிறேம்!
இரட்டை வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் சரவணா :))
நிறைவாய் எழுத நினைப்பவர்கள் நிறைய எழுதுவது இல்லை. எழுத்தில் மட்டுமல்ல. எல்லாக் கலைத் துறைகளிலும் இப்படித்தான்.
எழுதப் போகும் எழுத்துக்களுக்காக வாழ்த்துக்களும் காத்திருப்புக்களும் சரவணன்.
நூறுக்கும் பிறந்த நாளுக்கும் வாழ்த்துகள் சரவணா
வாழ்த்துக்கள் நண்பா
இங்கு என்ன வேண்டுமானாலும் எழுதலாம் எனும் கட்டற்ற சுதந்திரம் மகிழ்ச்சியும் பயமும் கலந்த ஒரு கலவையான உணர்ச்சியைக் கொடுக்கிறது.
உண்மைதான்
நான் வலையுலகில் கண்ட தனித்துவமிக்க மனிதர்களில் தாங்களும் ஒருவர் நண்பா.
தாங்க சொல்வது உண்மைதான் எண்ணிக்கை முக்கியமல்ல
நம் பதிவால் நமக்கும் பார்வையி்ட்டவர்களுக்கும் கிடைக்கும் மனநிறைவு, சிந்தனை தான் முக்கியமானது.
நூறு பதிவுகள் என்பது எண்ணிக்கை தானே தவிர இப்போதுதான் புதிதாக தொடங்கியிருப்பதாக நினைத்துக்கொள்கிறேன்.
நல்லாச் சொன்னீங்க நண்பா.
ஒவ்வொரு பதிவரும் நினைவில் கொள்ள வேண்டிய சிந்தனை தான் இது.
வாழ்த்துகள் சரவணா:)
வாழ்த்துகள் சரவணக்குமார் .
சரவணா..உன் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும் .பாசாங்கில்லாத ஒரு சிநேகம் உறைந்திருக்கும்..வாழ்த்துக்கள்...
ஹலோ நண்பா.. என்னாது நூறு பதிவா? இதைக் கொண்டாட வேணாமா? உடனடியாக இணையத்தில் தேடி, நூறு என்ற இலக்கம் இருக்கும் படங்களாகப் பிடித்து, "என்னை வாழவைத்த தெய்வங்களாகிய தமிழ் மக்களே . .' என்று ஆரம்பித்து, நன்றி பதிவு போடுங்கள். இல்லையென்றால், நீங்கள் தமிழ்ப் பதிவரே இல்லை என்று முத்திரை குத்தப்பட்டு விடுவீர்கள். அப்படியே, பத்தாவது பதிவு, இருவதாவது பதிவு, ஐம்பதாவது பதிவு என்றெல்லாம் லேபில் க்ரியேட் செய்யவும். அதனை ப்ளாக்கின் ஓரத்தில் போடவும். பதிவின் இறுதியில், நன்றி நன்றி நன்றி என்ற வார்த்ஹைகள் கொட்டை எழுத்தில் இருத்தல் நலம். கைகூப்புவது போன்ற படமும் இருக்கலாம். 'தமிழ் மக்களுக்கு செருப்பாக இருப்பேன்' ஆகிய வரிகளும் முக்கியம். கமான். பதிவு ரெடி செய்யுங்க
jokes apart, நல்ல பதிவுகள், நல்ல மொழி இதெல்லாம் வேண்டும் என்றால், உடனே நான் தேடிப்பிடிக்கும் சில பதிவுகளில் உங்களதும் ஒன்று (இன்னொன்று கீதப்ரியன்) . ஆகவே, மனமார்ந்த வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்.
தொடரட்டும் இனிதாய்...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சரவணக்குமார்..
மெதுவான பயணமென்றாலும் ஒரு அழுத்தம் திருத்தமான பயணமிது.. தொடருங்கள்... வாழ்த்துக்கள்..
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சரவணா..
நூறு பல நூறாகட்டும். வெற்றிப்பயணம் சிறப்பாகட்டும்.
வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் சகோ.
@ அருண்மொழித்தேவன்
நன்றி பாஸு.. பெயர் நல்லாருக்கு.
@ செந்திலன்
நன்றி நண்பரே.
@ நன்றி சர்புதீன்
@ கேபிள் சங்கர்
ரொம்ப நன்றிண்ணே.
@ கீதப்ப்ரியன்
மிக்க நன்றி நண்பா.
@ அக்பர்
அன்பும் நன்றியும் நண்பா. கவிதை நல்லாருக்கே.. நேர்ல வரும்போது பேசிக்கிறேன்.
@ ரத்னவேல்
நன்றி ஐயா.
@ மாது அண்ணா.
மனம் நிறைந்த நன்றிகள் மாது அண்ணா. உங்களிடமிருந்து இப்படி ஒரு வாழ்த்துப்பெற்றதை பெருமையாக நினைக்கிறேன். மிக்க மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். ஆனால் என்ன இது தாங்கள்.. போங்கள்.. என்று. வேண்டாமே அண்ணா இது.
@ உலக சினிமா ரசிகன்
மிக்க நன்றி நண்பா.
@ ஷங்கர்
நன்றி நண்பா.
@ நன்றி சுந்தர்ஜி
@ நன்றி மோகன் குமார்
@ முனைவர் இரா.குணசீலன்
மிக்க நன்றி முனைவரே.
@ நன்றி பாலா சார்.
@ நண்டு@நொரண்டு ஈரோடு
நன்றி நண்பரே.
@ மணிஜி
மிக்க நன்றி அண்ணா. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுபோதும், இதுக்கு மேல ஒண்ணும் எழுதவே வேண்டாம்னு தோணுது. நன்றிண்ணே.
@ ராஜேஷ்
ரொம்ப நன்றி நண்பா. கருத்துரையை ரசித்தேன். அன்பு நிறைய.
@ நன்றி மாதேவி.
@ க.பாலாசி
நன்றி நண்பா.
@ சேக்
ஆஹா வாங்கய்யா வாங்க. நல்லாருக்கீங்கள்ல. வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா.
@ ஸாதிகா
நன்றி அக்கா.
நூறுக்கும் பிறந்த நாளுக்கும் வாழ்த்துகள் சரவணக்குமார்.செ
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சிறப்பான நூறு. தொடர்ந்து எழுதுங்கள்.
மெதுவாக எழுதினாலும் நிறைவாக எழுதியுள்ளீர்கள் சரவணன்.. வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் சரவணன்.
@ ம.ரா
@ ராமலக்ஷ்மி
@ ஸ்டீபன்
@ காமு அண்ணா
மிக்க நன்றி..
பயணம் தொடர,நெஞ்சினிக்கும் வாழ்த்துகள்.
எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நூறாவது பதிவுக்கும் பிறந்த நாளுக்கும் (சற்றே தாமதமான) வாழ்த்துகள். உங்கள் நூறு பதிவு என்பது ஐநூறு பதிவுக்கு சமம்.
nooru vaalththukkal.. pallaayiram aandukal vaaltnthu nalla thau seiya vendum enn vaalththukkal
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சரவணன்.
என் நண்பன், இன்னும் நூறு பிறந்த நாள் காணவேண்டும், வாழ்த்துச் சொல்ல நாங்களும்...!
@ ஜெரி அண்ணே..
ரொம்ப நன்றி.
@ நன்றி அன்புடன் மலிக்கா.
@ ஸ்ரீராம்
மிக்க நன்றி சார்.
@ மதுரை சரவணன்
ரொம்ப நன்றி நண்பா.
@ சத்ரியன்
ரொம்ப நன்றி நண்பா. நூறையெல்லாம் விடுங்கள், என் நண்பன் எனும் வார்த்தைதான் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அன்பு நிறைய.
எனது பதிவுகள் அனைத்திற்கும் கருத்துரை வழங்கி தொடர்ந்து உற்சாகப்படுத்திய நண்பர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
வாழ்த்துகள் சரவணன்,
என்னது 2009 இல் ஆரம்பித்து 100 பதிவு போட்டது ரொம்ப மெதுவா , என்னைக்கேட்டா நீங்க ரொம்ப வேகம் சார்! நானெல்லாம் உங்களுக்கு பின்னாடி தான் ஊர்ந்து வரேன் :-))
//எல்லாவற்றிற்கும் மேலாய் எத்தனை எத்தனை சொந்தங்களை இந்த இணையம் கொடுத்திருக்கிறது. அன்போடு கை பிடித்து வழிநடத்திச் செல்லும் அண்ணன்கள், எத்தனையோ மைல்களுக்கு அப்பாலிருந்து மணிக்கணக்காக தொலைபேசும் மதிப்பிற்குரிய அன்பர்கள்,//
இது இதுதான் வலைப்பதிவின் பலம்.
நல்வாழ்த்துகள்
கருத்துரையிடுக