ரஹிமா ஒரு அழகிய நகரம். தமாமிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் முக்கால் மணி நேரப் பயணத்தில் இருக்கும் சிறு நகரம். எளிமையும், அழகும், அமைதியும் கொண்ட கடற்கரையோர நகரம். இங்குள்ள அராம்கோ ரிஃபைனரிக்கு சில செமினார்களுக்காக முன்பு வந்ததுண்டு. ஆனால் நகரினுள் வந்ததில்லை. ராஸ்தனோரா பிளாண்ட் என்பதே இந்த ரிஃபைனரியின் பெயர். அப்போது ராஸ்தனோராவும் ரஹிமாவும் வேறு வேறு நகரங்கள் என நினைத்திருந்தேன். இங்கு வந்தபிறகே இரண்டும் ஒன்றே என அறிய முடிந்தது. நமது கும்பகோணத்தை குடந்தை என்று அழைப்பதைப்போல ராஸ்தனோரா ரஹிமா ஆகியிருக்கிறதோ என்று நண்பர் ஒருவரிடம் கேட்டேன். இருக்கலாம் என்றார். அவர் தனது இருபதாண்டு கால சவுதி வாழ்க்கையையும் இந்த ரஹிமாவில்தான் கழித்திருக்கிறார். அப்போதிருந்தே இந்த நகரம் ரஹிமா என்றுதான் அழைக்கப்படுகிறது என்றும் சொன்னார். எது எப்படியோ ரஹிமா என்ற ராஸ்தனோரா தான் எனது இப்போதைய வாசஸ்தலம்.
கடந்த சனிக்கிழமை அன்று காலை கோபரிலிருந்து துவங்கியது பயணம். முதலில் ஜுபைலில் இருக்கும் தற்போதைய எனது அலுவலகத் தலைமையகம் சென்றேன். ஜெத்தா ரோட்டில் இருக்கும் டெலிமணி அலுவலகக் கட்டிடத்தில் இயங்கும் ஒரு மேன்பவர்நிறுவனம் தான் என்னை இந்தப் பணிக்காகத் தேர்வு செய்தது. இதற்கு முன்பாக ஜுபைல் வந்ததில்லை. இதுவே முதல்முறை. எனக்கு நிறைய நண்பர்கள் இங்கிருக்கின்றனர். முதலில் இங்குதான் அறை எடுப்பதாக இருந்தது. பின்னர் தமாம் தமிமி கேம்பில் அறை எடுத்துள்ளோம் என்றார்கள். கடைசி நேர மாற்றத்தில் ரஹிமா என்று முடிவாகிவிட்டது. ஜுபைலோ, தமாமோ என்றால் விடுமுறை நாட்களில் நண்பர்களோடு இருக்கலாம் என்று ஆசையோடிருந்தேன். இப்போது ரஹிமாவில் புதிய நண்பர்களைத் தேடவேண்டும். ஜுபைலில் இருந்து தமாம் செல்லும் சாலையில் ஒரு பெரிய விபத்து நடந்து சாலையே ஸ்தம்பித்துப்போயிருந்தது அன்று. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காரிலேயே காத்திருந்த பின் வேகமெடுத்தது வண்டி. தமாமிலிருந்து ரஹிமா செல்லும் பாதை வழக்கமான பரபரப்புகள் ஏதுமின்றி இயல்பாக இருந்தது.
சாலைக்கு வலதுபுறத்தில் பிரம்மாண்டமான நீலப்போர்வை போர்த்தியிருந்ததைப்போன்ற தோற்றத்தில் விரிந்திருந்தது கடல். ரஹிமா நகருக்குள் நுழைவதற்கு முன்பாக இருந்த பாலத்திலிருந்து பார்த்தபோது எங்கள் கிராமத்தின் கம்மாய் ஒன்றைப் பார்ப்பது போலிருந்தது. இங்கு எல்லா நகரங்களிலின் நுழைவாயிலிலும் இருப்பதைப்போன்ற செக்யூரிட்டி செக்போஸ்ட் இங்கும் உண்டு. ஆனால் கொஞ்சம் சிறப்பு வாய்ந்தது இந்த செக்போஸ்ட். மற்ற நகர்களைப்போல அல்ல இந்நகரம். ரஹிமாவிற்குள் சாலை வழியாக செல்வதற்கு வேறு பாதைகள் இல்லை இது ஒன்று மட்டும் தான் என்று எங்களை அழைத்துவந்த கோ ஆர்டினேட்டர் சொன்னார். வியப்பானதாகவும் புதிய செய்தியாகவும் இருந்தது. நூற்றாண்டு காலப் பழமையான நகரம். முன்பு கடல் வாணிபத்தில் சிறந்துவிளங்கியதாம். பின்னர் அராம்கோ எண்ணெய் நிறுவனம் துவங்கப்பட்ட பின்னர் சவுதியின் சிறப்பு வாய்ந்த முக்கியமான நகரங்களில் ஒன்றாகிப்போனது.
கிட்டத்தட்ட ஒன்றரை மாத வேலையின்மையைக் கடந்து மூன்று நேர்காணல்களை வெற்றிகரமாக முடித்து இந்தப் பணியில் சேர்ந்திருக்கிறேன். நின்று நிதானமாக ரஹிமாவை ரசிக்கவோ சுற்றிவரவோ முடியாத அளவிற்கு நேரமின்மை இப்போது. நல்ல வேலையில் இருக்கும்போதே திடீரென்று அந்த வேலை இல்லாமல்போய் ஸ்டாண்ட் பை யாக இருப்பது கொடுமையிலும் கொடுமை. வேலையற்று இருக்கும் ஒவ்வொரு நாளும் நரகமாகக் கழியும். கையில் சுத்தமாக காசு இல்லாமல் வீட்டிற்கும் பணம் அனுப்ப முடியாமல் பெரும் மன உளைச்சல் கடந்த 40 நாட்களாக. ஒருவழியாக சூழல் மாறி புதிய ஊர் புதிய பணி என்று செட்டிலாகத் தொடங்கியிருக்கிறேன்.
சவுதி அராம்கோவின் தலைமையகமான டெக்ரானில் தான் தற்போதைய பணி. காலையில் 5 மணிக்கே இங்கிருந்து கிளம்ப வேண்டும். 1 மணி நேரத்திற்கும் மேலான பயணம். காலை மாலை இரண்டு நேரமும் சேர்த்து நாளொன்றுக்கு இரண்டரை மணி நேரப் பயணம். பணி முடித்து மாலை ரஹிமா திரும்பும்போது இரவாகிவிடுகிறது. குளித்து, உணவருந்தி தூங்குவதற்கு மட்டுமே நேரம் இருக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு மணி நேரமாவது இணையத்தில் இருப்பது என் வாடிக்கை. இந்த வழக்கத்தை கொஞ்ச காலத்திற்கு தள்ளிப்போடவேண்டிய நிர்பந்தம் தற்போது. இப்போதைக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் மட்டுமே இணையத்தில் உலவ முடிகிறது. இதுவும் நன்றாகவே இருக்கிறது.
கடந்த ஒரு வார காலப் பதிவுகள், கட்டுரைகள், இணைய விவாதங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. படிக்கப் படிக்க நீண்டுகொண்டே போகின்றன பக்கங்கள். நெடுநாள் பசியில் இருப்பவன் உணவை வெறித்தனமாக உண்பதைப்போல வேகவேகமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மதிய சலாவிற்குப் பின்னர் நகரைச் சுற்றலாம் என்று திட்டமிட்டிருந்தோம். 4 மணிக்கு மேல்தான் அனைத்துக் கடைகளும் திறக்கும் என்பதாலும் வெயில் குறைந்த மாலை வேளையில் நடப்பது நலமென்பதாலும் 5 மணி அளவில் நகரவீதிகளில் நடக்கத்தொடங்கினோம். கோபர் போலோ, தமாம் போலோ இல்லாது முக்கியமான அனைத்துக்கடைகளும் வங்கிகளும் ஒருசேர ஒரே கடைவீதியில் அமைந்திருந்த ஆச்சர்யத்தை எண்ணி வியந்தோம். டாக்சி ஸ்டாண்டை ஒட்டி சில கேரள உணவகங்கள் இருக்கின்றன. சாலையின் தொடக்கத்திலேயே டெலிமணி இருக்கிறது. சற்றுத்தள்ளி இன்ஜாஸ் வங்கி, அடுத்தடுத்து சூப்பர் மார்க்கெட்டுகள், பிரதான சாலையைக் கடந்தால் பாண்டா, கே.எஃப்.சி உணவகம், டெலிமணிக்கு அருகிலேயே அல் தாவா ஃபார்மஸி, அல்.ரஜி வங்கி என எல்லாமும் இருக்கிறது.
ஒரு அல்.ரஜி வங்கியும், சோப்பு, சீப்பு, கண்ணாடித்தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு பக்காலாவும், செத்துப்போன நாக்கிற்கு உயிர் கொடுப்பதற்கென மாதம் ஒருமுறை செல்ல ஒரு உள்ளூர் உணவகமும் இருந்துவிட்டாலே போதும் சவுதியில் வேலைபார்க்கும் ஒரு அயல் தேசத்தவனுக்கு வேறெந்த கவலையும் இல்லை. கூடவே நிரந்தரமாக ஒரு நல்ல வேலையும் இருக்கவேண்டும். அவன் கொஞ்சமாவது நிம்மதியாக இருக்க.
வேலை நிமித்தமாக நான் தங்க நேரிடும் நகரங்களை நேசிக்கத்தொடங்கிவிடுவது என் வழக்கம். இந்த ரஹிமா நகரம் தற்போதைய என் நேசத்திற்குரியதாகியிருக்கிறது. புதிய சூழல், புதிய நிலம் என பாலைப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எப்போதும்போல எதற்காகவும் நின்றுவிடாமல் காலத்தின் சக்கரங்கள் சுழன்றுகொண்டே இருக்கின்றன.

16 கருத்துரைகள்:
புத்துயிர்த்தல் புத்துலகின் மலர்களின் வாசனைகளால் நிரம்பட்டும் .அந்த கடல் /வெளியில் உங்கள் பாதங்களுக்கான சிப்பிகள் பயணவுறக்க இமைகள் போல் புதைந்தும் மிதந்தும் அலைந்திருக்கக் கூடும் .நலம் பெருகட்டும் !
புதிய சூழலில் புதுமைப்பதிவுகள் பிறக்க வாழ்த்துக்கள் நண்பரே!
தொலைதூரத்தில் இருக்கும் தம்பியின் பார்வைகளும், அனுபவங்களும் எழுத்துக்களில் தெரிகின்றன. சொல்கிற விதம் மிக இயல்பானதாய் வந்து ஒட்டிக்கொள்கிறது. சமயவேலின் ‘எல்லா நிலங்களிலும் எம்மனிதர்களே’ என்னும் கவிதை வரிகள் அசைகின்றன.
வாழ்த்துக்கள் சரவணன்
நான் ரஹிமாவில் தான் ஒன்றரை ஆண்டுகள் இருந்தேன் நண்பரே!ஜுயுமா கேஸ் பிளாண்ட் புராஜெக்ட்டில் பணி!
பொதுவாக சவுதியில் மற்ற இடங்களில் இருக்கும் போது ஒரு சின்ன பதட்டம்/இனம்புரியாத பயம் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்கும்.ஆனால் ரஹிமாவில் அதை நான் உணர்ந்ததில்லை.எத்தனையோ இரவுகளில் தனியாக கடைத்தெருவிலிருந்து கேம்ப்க்கு (கேஎப்சிக்கு பக்கத்தில் இருந்தது) வந்திருக்கிறேன் எந்த பயமுமில்லாமல்!
எனக்கு மிகவும் பிடித்த ஊர்
வாழ்த்துக்கள் சரவணன், புதிய வேலை, புதிய இடம் எல்லாம் உங்களுக்கு ஏதுவாம் அமையட்டும்..
நண்பா
மிக்க மகிழ்ச்சி
நம் போன்றோருக்கு உலகமே வீடு
நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்
இந்த தருணத்தில் கிடைத்த பாடங்கள் நமக்கு கோடி கொடுத்தாலும் கிடைக்காது,அது ஒன்றே அதன் பயன்,இனி நல்லதே நடக்கும்.
புதிய பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள் சரவணன்.
நீங்கள் ரஹிமாவைப்பற்றி சொல்லும் போதே அதைக் காணவேண்டும் என்ற ஆவல் துளிர்க்கிறது.
போட்டோக்கள் எடுத்தால் போடுங்கள்.
நீண்ட மன உளைச்சலுக்கு பிறகு கிடைக்கும் நிம்மதி அளவிடமுடியாதது.
//வேலை நிமித்தமாக நான் தங்க நேரிடும் நகரங்களை நேசிக்கத்தொடங்கிவிடுவது என் வழக்கம். இந்த ரஹிமா நகரம் தற்போதைய என் நேசத்திற்குரியதாகியிருக்கிறது.//மிக நல்ல எண்ணம்.அனைவருக்கும் இது இருந்தால் என்றுமே மகிழ்ச்சிதான்.புதிய பணி சிறக்க வாழ்த்துக்கள்,.
என் அன்புத்தம்பி, அந்த பயணம் சிறுகதையைப்படித்த பிறகு திருத்தங்கல் நினைவுகள் சுழன்று சுழன்று அடித்தது.வங்கிக்குள் நுழைகிற ஒவ்வொரு வாடிக்கையாளர் மீதும் படிந்திருக்கிற கரிமருந்துவசத்தின் அடர்த்தியைச்சொல்ல சரியான ஆள் கிடைத்த சந்தோசம் சரவணன் எழுத்தில் இருந்தது.
அப்படியே கைபிடித்து இழுத்துச்செல்லும் உங்கள் எழுத்தில் நான் அநேக ஊர்க்கதைகளை எதிர்பார்த்தபடியே ஒவ்வொரு பதிவிலும் தேடுகிறேன்.
சரவணா நிறைய்யச்சொல்லவேண்டிய ஊர்க்கதைகள் இருக்கிறது.அத்ற்கு உங்கள் வாசிப்பு கூடுதல் மெருகூட்டும்.
ரஹீமாவை ரசித்தேன். அது சரவணனின் எழுத்து வல்லமை.
ஆசுவாசமாக இருக்கிறது சரவணா. கொஞ்சம் இழுத்து மூச்சு விட்டால் கேட்க கூடிய தூரம் பெரிய ஆசுவாசம். செட்டில் ஆகுங்க முதலில். பிறகு வாகு பார்த்து, நிறைய எழுதுங்கள். ரெஸ்ட்டனோராதான் ரஹீமாவா? புதிய தகவல் எனக்கு.
All the best மக்கா! :-)
வாழ்த்துகள் சரவணா:)
நன்றி நேசன்
உலக சினிமா ரசிகன்
நன்றி நண்பரே..
மாது அண்ணா
மிக்க நன்றி.
கரிசல்காரன்
நன்றி நண்பா. நீங்கள் குறிப்பிடுவதுபோல ரஹீமா பாதுகாப்பான நகரமாகவும் இருக்கிறது. மற்ற நகரங்களில் இல்லாத ஒரு முக்கியமான விஷயம் இது நண்பரே. நான் டெலிமணிக்கு முன்பு இருக்கும் சாலையையொட்டி இருக்கிறேன். மிக்க நன்றி கருத்துரைக்கு.
நன்றி ஸ்டீபன்.
கீதப்ப்ரியன்
நன்றி நண்பா. ஆம் நமக்கு உலகமே வீடுதான் இல்லையா?
நன்றி ஸாதிகா அக்கா.
காமு அண்ணா
மனமார்ந்த நன்றிகள் அண்ணா. நெகிழ்ந்துபோய் இருக்கிறேன் உங்கள் பின்னூட்டம் கண்டு. ஊர்க்கதைகள் கொட்டிக்கிடக்கின்றன கந்தகநெடியோடு. நிச்சயம் தொடர்ந்து எழுதுகிறேன் அண்ணா.
நன்றி பாலா சார்.
பா.ரா
நிச்சயமாக. அன்பிற்கு நன்றி அண்ணா.
புதிய பணிக்கு வாழ்த்துகள் சரவணன்
புதூ ஊரூ, புதூ வேலை, புதூ ஃப்ரண்ட்ஸூ... கலக்குங்க..
வாழ்த்துகள்.
நன்றி கதிர் அண்ணா.
ஹுஸைனம்மா
நன்றி.
கருத்துரையிடுக